.
துணி துவைக்கும் இயந்திரம், இடத்தை அடைக்கும். அதிர்வில் அங்கும் இங்கும் நகரும். உருவில் பெரியது என்பதால் போகுமிட மெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது.
சோனிக் சோக் (Sonic Soak) என்ற சிறு கருவி, துணி துவைக்கும் இயந்திரம் செய்யும் சகல வேலைகளையும் செய்கிறது. ஆனால், கைக்கு அடக்கமானது.
இது எப்படி துணியை துவைக்கிறது? லேசான சோப்புக் கலந்த நீரில் சோனிக் சோக் கருவியை மூழ்க விட்டு, துணியைப் போட்டு, முடுக்கிவிட்டால், நம் செவி உணரா அதிர்வலைகளை எழுப்புகிறது வினாடிக்கு 50 ஆயிரம் அல்ட்ரா சோனிக் அதிர்வலைகளை எழுப்புவதன் மூலம் துணியில் படிந்துள்ள அழுக்கு, எண்ணெய் கறை, உணவுக் கறை போன்றவை துணியின் நுாலிலிருந்து பிரிந்து தண்ணீரில் கரையும். துணியும் சுத்தமாகிவிடும்.
சோனிக் சோக்கில் மின்சாரப் பயன்பாடும் குறைவாக இருப்பதால், விரைவில் வீடுகளில் சோனிக் சோக் இடம் பிடித்துவிடும் என, இதன் கண்டுபிடிப்பாளர்கள் நம்புகின்றனர்.