ஒவ்வொருவரது தேவைக்கும் ஏற்ற வகையில் அரசியல் ஈடுபட போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஒவ்வொருவரது விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய அரசியல் ஈடுபட முடியாது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே நான் அரசியல் ஈடுபடுவேன்.
நாட்டில் தற்போது நிலவி வரும் நிiமைக்கு அமைய நான் செல்லும் இடத்தில் எல்லாம் மக்களின் பேராதரவு கிடைக்கப் பெறுகின்றது.
என்னைச் சுற்றி இணைந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்கின்றது. நான் எந்த சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட மாட்டேன்.
எனது அரசியல் வாழ்க்கை பற்றி ஒவ்வொரு கதை சொல்லப்படுகின்றது. மக்கள் என்னை நேசிக்கின்றார்கள். அவர்களின் தேவைக்கு நான் அரசியலில் ஈடுபடுவேன்.
அதனை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.