ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக்

309
குழந்தைகளுக்கு சத்தான ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள் :

பாதாம் – 10
காய்ந்த திராட்சை – 10
ஓட்ஸ் – அரை கப்
ஏலக்காய் – 2
சர்க்கரை – அரை கப்
பால் – இரண்டு கப்
ஐஸ் கட்டி – இரண்டு துண்டு

முந்திரி துண்டுகள் – ஐந்து, அலங்கரிக்க
ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக்

செய்முறை :

பாதாம், காய்ந்த திராட்சையை 30 நிமிடம் ஊற வைக்கவும்.

ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து பொடித்து கொள்ளவும்.

வறுத்த ஓட்ஸ், ஏலக்காய், சர்க்கரை, பால், ஐந்து நிமிடம் ஊறவைத்த பாதாம், காய்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

பிறகு, அதில் ஐஸ் கட்டி சேர்த்து ஒரு அடிஅடித்து ஒரு கப்பில் ஊற்றி முந்திரி துண்டுகள் துவி பரிமாறவும்.

சத்தான ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக் ரெடி.
SHARE