சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வேலைகளை அமைதியாக செய்து வருகிறார். அதே வேளையில் விஜய்யையும் அவரது அப்பா சந்திரசேகர் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் விஜய்யின் பிறந்தநாள் விழாக்கள் அடுத்தடுத்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதே வேளையில் ரஜினியும், விஜய்யும் பட விசயத்தில் ஒன்றுபட்டுள்ளார்கள்.
இவர்களின் அடுத்த படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இதில் முருகதாஸ் இயக்கும் விஜய்யின் படம் ஸ்டிரைக்கால் பணிகள் தொய்வடைந்துள்ளது.
அதே போல ரஜினியின் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் 25 வருட விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படவுள்ளது. இதில் இருவரும் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.