ஓய்வு பெறுகிறாரா உசைன் போல்ட்?

180

 

ரியோ ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனை படைத்த ஜமைக்கா நாட்டு சூப்பர் ஸ்டார் உசைன் போல்ட் விரைவில் விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் நிகழ்த்தாத சாதனையை ஜமைக்கா நாட்டை சேர்ந்த உசைன் போல்ட் நிகழ்த்தி தனது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

114 விநாடிகளில் 9 தங்கப்பதங்களை வென்ற ஒரே விளையாட்டு வீரர். அதாவது, மைதானத்தில் 2 நிமிடங்கள் மட்டும் செலவிட்டு போல்ட் 9 தங்கப்பதங்களை இதுவரை வென்றுள்ளார்.

போல்ட்டின் வேகத்தை ஒரு வாகனத்தின் வேகத்தோடு ஒப்பிட்டால், போல்ட் மணிக்கு சுமார் 3,54,056 கி.மீ தூரம் ஓடக் கூடியவர் ஆவர். இவ்வளவு வேகத்தில் இதுவரை எந்த மனிதரும் ஓடியதில்லை.

இதனால் தான், போல்ட் ‘ஒரு மின்னல் மனிதர்’ என அழைக்கப்படுகிறார்.

உலகம் முழுவதும் தற்போது போல்ட்டின் பெயரை உச்சரித்து வரும் நிலையில், அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் போல்ட் விளையாட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

SHARE