ஓய்வு பெறும் இயான் மோர்கன்

166

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் இயான் மோர்கன். இயான் மோர்கன் 16 டெஸ்ட்களில் விளையாடி 700 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,701 ரன்களும், 115 டி20 போட்டிகளில் விளையாடி 2,458 ரன்களும், 83 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2,458 ரன்களும் எடுத்துள்ளார்.

இதற்கிடையே, இயான் மோர்கன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், உள்ளூர் போட்டிகள், பிற லீக் கிரிக்கெட்டுகளில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயான் மோர்கன் அறிவித்தார். இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

maalaimalar

SHARE