ஓய்வு பெற்றார் இலங்கை சாதனை வீரன் ரங்கன ஹெராத்

184

இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இன்று ஓய்வு பெற்றுள்ளார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் காலே மைதானத்தில் நடந்து வருகிறது.

கடைசி டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார்.

காலே நகரில் நடைபெற்றும் முதல் டெஸ்ட் போட்டியுடன் அவர், ஓய்வு பெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

அதன்படியே, இன்று காலோ மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியுடன் ஒய்வு பெற்றார் ரங்கனா ஹெராத்.

மைதானத்திற்கு, அவரது மனைவி மற்றம் பிள்ளைகளும் வந்திருந்தனர். ரங்கனாவை தங்களது தோளில் சுமந்து சென்று இலங்கை வீரர்கள் பிரியாவிடை கொடுத்தனர்.

40 வயதான ஹெராத் 1999-ம் ஆண்டு காலே மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக மானார்.

92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 430 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இலங்கை அணியில் முரளி தரனுக்கு (800 விக்கெட்கள்) பிறகு அதிக விக்கெட்கள் வேட்டையாடியவர்களில் ஹெராத் 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE