பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஆயிஷா நசீம். 18 வயதான அவர் இதுவரை நான்கு ஒருநாள் போட்டி மற்றும் முப்பது 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆயிஷா நசீம் திடீரென்று அறிவித்து உள்ளார். தனது முடிவை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது நான் கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன். இஸ்லாத்தின் படி என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் என்று கூறினார்.
maalaimalar