ஓவியாவின் அடுத்த ஸ்பெஷல் இதோ!

128

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனங்களையும் ஈர்த்தவர் ஓவியா. ஆனால் அவர் பாதியிலேயே வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சி தான்.

இதன் பின் ஓவியா தற்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் பிருத்வி பாண்டியராஜனுடன் கணேசா மீண்டும் சந்திப்போம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ரத்தீஷ் எரட்டே என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் ஓவியாவுக்கு ஸ்பெஷலாக ஒரு பாடல் வெளியாகியுள்ளது.

இப்பாடல் வியா வியா ஓவியா, நீ கிளியோபட்ரா ஆவியா..நீ மனச திறக்கும் சாவியா என்ற வரிகளை கொண்ட இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

SHARE