ஓவியாவுக்கு ஓட்டுப்போட்டவருக்கு ஏற்பட்ட சோகமான நிலை!

239

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு பெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. பலரும் மற்ற பிரச்சனையெல்லாம் மறந்துவிட்டு பிக்பாஸ் பார்த்து ஓட்டுப்போட்டு கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஓவியாவுக்கு ஒட்டு போட்ட ஒருத்தர் நிலைமைய பாருங்க (வாட்ஸப்பில் வந்த பதிவு)

வீட்டில் வெட்டியா சும்மா உட்கார்ந்திருந்தேன். டிவி யை ஆன் பண்ணி சேனலை மாற்றி கொண்டு வந்தேன்.

விஜய் டிவியில் பிக் பாஸ். பெரும்பாலும் பார்த்ததில்லை. அப்படி பார்த்தாலும் ஒன்றிரண்டு நிமிடங்கள் தான். ஆனா இன்னைக்கு இதில் என்ன தான் அப்படி சுவாரஸ்யம் இருக்கு என்று பார்க்க ஆரம்பித்தேன்.

பெருசா அதில் மனம் லயிக்கவில்லை. நடுவே ஓவியாவை காப்பாற்ற இந்த நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுங்க என்று ஒரு ஸ்க்ரோலிங் வந்தது.

நம்மால நயன்தாராவுக்கு தான் வாழ்க்கை கொடுக்க முடியல…. அட்லீஸ்ட் ஓவியாவையாவது காப்பத்துவோம் என்று திரையில் தெரிந்த நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுத்தேன் என்னோட நல்ல நேரம் மிஸ் ஆக போவதும், சனி பகவானின் கால் வைட்டிங்கில் இருப்பதும் தெரியாமல்.

அந்த நேரம் பாத்து என் மனைவி என்னை கிராஸ் பண்ணி போனாள். எதுக்கு வம்பு…. சட்டென்று சேனல் மாத்தினேன்.

எந்திரனில் வரும் சிட்டி ரோபோவை போல் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் பொன்னியின் செல்வன் நாவலையை ஸ்கேன் செய்து விடும் கூர்மையான பார்வை கொண்டவள்.

கொஞ்ச நேரம் கழித்து என் அருகில் வந்தவள்… ” யாருக்குங்க கால் பண்ணீங்க..? ” அவள் கேட்ட தொனியே பிரச்சனை ஃபிரெஷ்ஷா ப்ரெசென்ட் ஆகுற மாதிரி இருந்தது.

இப்போ பாகிஸ்தானிடம் சரண்டர் ஆன கோலி போல சரண்டர் ஆவதா… இல்லை 2011 world cup ஃபைனலில் தோனி அடி மாதிரி எதிர்த்து நின்னு பேசுவதா என்று ஒரு சிறு குழப்பம்.

சரி… டிபன் கூட சாப்பிட்டாச்சு… காபி கேட்டோம்… அதையும் போட்டு கொடுத்துட்டா … இன்றைய நாளுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை.. சரி இப்போ கோலி பாதையா… இல்லை தோனி பாதையா என்ற முடிவில் தோனி பாதையை தேர்தெடுத்தேன்.

“ஆஃபீஸ் கால்டி” என்றேன் செம கெத்தாக. சட்டென்று என் மொபைலை எடுத்து பார்த்தவள்…”இது தான் அந்த ஆஃபீஸ் காலா..” ன்னு கேட்டாள்.

கண் முன்னே கோலி வந்து நக்கல் சிரிப்பு சிரிப்பது தெரிந்தது.

இல்லடி…. சும்மா தான்… மிஸ்ட் கால் தானே… அதான்…. நீ இந்த காலுக்கு முன்னாடி பண்ண கால் பத்தி தான் கேக்குறேன்னு நெனைச்சு ஆஃபீஸ் கால்ன்னு சொன்னேன்.

உருண்டு வர பாலில் கூட ரன் அடிக்க முடியாமல் லொட்டு வைத்து ஆடினேன். என்ன பிரயோஜனம்… போடுறது பொண்டாட்டி… சிங்கிள் ரன் அடிச்சாலே எனக்கு ஆப்பு தான் …. போல்ட் ஆவது தான் உத்தமம்.

” அது சும்மாமா… விளையாட்டுக்கு… ” என்று சிரிப்பை வர வழித்து கொண்டே சொன்னேன்.

“என்ன விளையாட்டு…. எவளோ ஒருத்திய காப்பாத்த மிஸ்ஸ்ட் கால் கொடுக்குறீங்க…. நேத்து தலை வலிக்குது… அந்த செல்பில் இருந்து மாத்திரை எடுத்து கொடுங்கன்னா… கொஞ்சம் இரு முக்கியமான ஆஃபீஸ் மெயில் பாக்குறேன்….ன்னு கடைசி வரைக்கும் எடுத்தே கொடுக்கல… இன்னைக்கு … யாரு அவ ஓவியாவா… கண்டவளுக்கு … மிஸ்ஸ்ட் கால் கொடுக்குறீங்க…. ”

நான் அவளுக்கு கொடுக்கலாமா… அவங்க சொன்ன நம்பருக்கு தான் கொடுத்தேன்….ஓ… அவளுக்கு வேற கால் பண்ணி பேசுவீங்களா…. அந்த நெனப்பு வேற இருக்கா… அது இல்லடி…. ஒரு மிஸ்ஸ்ட் கால் தானே கொடுத்தேன்… அதுக்கு போய் இப்படி தேவ இல்லாம ஏன் பிரச்சனை பண்ணுற….

ஓ…. அப்போ நான் தான் பிரச்சனை… உங்களுக்கு… ஒரு போன் கால் பத்தி கூட எனக்கு கேக்க உரிமை இல்லையா..நான் அப்படி சொல்லலடி… ஒரு சின்ன விஷயம் அதை போய்… இப்படி பெரிசு படுத்தாதேன்னு… சொல்லுறேன்.

எது சின்ன விஷயம்…. நீங்க கண்டவளுக்கெல்லாம் மிஸ்ட் கால் கொடுக்குறதா….

சரி விடுடி…. சத்தியமா இனி எவளுக்கும் கால் பண்ண மாட்டேன் … போதுமா ?

எவளுக்கும் …அப்படீன்னா…. இன்னும் எத்தனை பேருக்கு கால் பண்ணுறீங்க….

இத பாருடி …சும்மா தான் இருக்கேன்னு டிவில சொன்ன நம்பருக்கு மிஸ்டு கால் பண்ணேன் …. அவளோ தான் …இது ஒரு குற்றமாடி …

இன்னாது சும்மா இருந்தீங்களா…. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பசங்க சோபால தூங்கறாங்க ….கொஞ்சம் படுக்கை போடுங்கன்னா … ஏதோ லேப்டாப்ல முக்கியமான் ஆபீஸ் வேலை இருக்குன்னு சொன்னீங்க

அம்மா தாயே …. தப்பு தான்…. மன்னிச்சுக்க …. போதுமா.

ஆமாம்…பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு அப்புறம் மன்னிச்சுக்கன்னு சொல்லிட வேண்டியது …

சரிடி….இப்போ என்னை என்ன செய்ய சொல்லுற ….

மொதல்ல அந்த DTH கனெக்ஷனை கட் பண்ணுங்க…. 9 மணி ஆனா போதும் ஈ….ன்னு பல்ல காட்டிக்கிட்டு கண்டவளை பாத்து பல்லு இளிச்சிகிட்டு இருக்க வேண்டியது.

அடி பாவி இன்னைக்கு தாண்டி கொஞ்ச நேரம் பாத்தேன்…. டெய்லி பாக்குற மாதிரி பேசுற….

கொஞ்ச நேரமாதான்னு பாக்குறேன்னு சொலுறீங்க

ஆனா அந்த நம்பரை பாக்காமலேயே அடிக்குறீங்க …

அது ஏதோ டக்குன்னு டைப் பண்ணிட்டேன் …. இது என்ன ஒரு உலக மகா குற்றமாடி

ஓ …அந்த அளவுக்கு உங்களுக்கு ஞாபக சக்தியா..?சரி என்னோட ஜியோ நம்பரை சொல்லுங்க ….

வேகமாக ஓடி கொண்டிருக்கும் வண்டியில் பஸ்ட் ஆகி கழன்று போன டயர் மாதிரி ஆனேன்.

பௌலர் பால் போட்டு தான் நாம போல்ட் ஆகணும்ன்னு அவசியம் இல்லை … என்னை மாதிரி நாமலே பேட்டை வச்சி நடு ஸ்டம்பை நச்சுன்னு அடிச்சி போல்ட் ஆகலாம்.

சிகரெட் புகைப்பதும், சரக்கு அடிப்பதும் மட்டுமல்ல உடல் நலத்திற்க்கு கேடு …. ஓவியாவுக்கு ஒட்டு போட்டாலும் தான் என்று தெரிந்துகொண்டேன் இன்று….

குறிப்பு: இவை அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே…..

SHARE