திட்டமிட்டு மகிந்த ராஜபக்சவின் அடிவருடிகளாலும் அரசியல்வாதிகளுக்கு ஊதுகுழலான சில பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.
குறித்த பொலிஸாரால், வடக்கு கிழக்கில் தமிழ் சமுதாயம் பல்வேறு வழிகளில் சீரழிக்கும் ஊக்குவிப்புக்களின் விளைவுகளை இப்பொழுது அன்றாடம் அனுபவிக்க முடிகின்றது.
இதன் விளைவாக அண்மையில் வன்னேரியில் யாழ்ப்பாணத்தில் ஆண் பெண் என கொலைகள் இடம்பெறுள்ளன. இந்த கொலைகளுக்கு அதிக மது பாவனை, சட்டவிரோத கசிப்பு உற்பத்தி என்பன காரணமாகவுள்ளது.
கிளிநொச்சியில் குற்றங்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டிய பொலிஸ் தரப்பும், சிறுசிறு ரவுடிக் கும்பல்களுக்கும் துணை போவதுடன் கிளிநொச்சியில் பாதாள உலகக் கோஸ்டிகளை உருவாக்க பொலிஸ் துணைபோவதாக அறிய முடிகின்றது.
இது தொடர்பாக ஆதாரங்களுடன் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மகஜர்கள் கடிதங்களை மக்கள் உடடியாக அனுப்ப இருப்பதாகவும் தெரியவருகின்றது.
கிளிநொச்சியில் பொலிஸ் தரப்பில் சிலர் ரவுடிக்கும்பல்களுடன் நல்ல உறவில் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.