கச்சத்தீவில் கடற்படை முகாம்-வெளியாகியுள்ள செய்தியை கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி முற்றாக மறுத்துள்ளார்.

302

கச்சத்தீவில் ஸ்ரீலங்காக் கடற்படை முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி முற்றாக மறுத்துள்ளார்.

கச்சத்தீவில் ஸ்ரீலங்காக் கடற்படை முகாம் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய மத்திய அரசு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியதாவது…

இதற்கு பதிலளித்த அவர், யாழ் ஆயரின் வேண்டுகோளின்படி கிறிஸ்தவ ஆயலம் ஒன்று அமைச்சின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படுகிறது. இதற்கு கடற்படை உதவிகளை நல்கிவருவதே ஒழிய, கடற்படை முகாம்கள் எதுவும் அங்கு அமைக்கப்படவில்லை – என்றார்.navenave01nave02nave03nave04nave05nave06nave07

SHARE