கஞ்சாவுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்

154

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருவேறு சந்தர்ப்பங்களில் மூன்று கிலோவுக்கும் அதிக நிறையுடைய கஞ்சாப் பொதிகளுடன் இருவர் நேற்றும கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை நீதவான் அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது, வவுனியா புதிய பஸ் தரிப்பிடத்திற்கருகிலிருந்து,  நேற்று பகல் 12.05 மணியளவில் கோரளைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவர் கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது, அவரிடமிருந்து 1 கிலோ 970 கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.

அதேபோல், குறித்த பிரதேசத்திலேயே மாலை 3.50 மணியளவில் வாழைச்சேனையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவரும் ஒரு கிலோ 735 கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளுடன் கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ள வவுனியா பொலிஸார் அவர்களை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியது, இதன்போது நீதவான் அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

SHARE