கினிகத்தேனை பகுதியில் கஞ்சா போதைபொருள் பக்கட்களுடன் ஒருவரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
06.05.2016 அன்று மாலை 5.30 மணியளவில் கினிகத்தேனை நகர பகுதியில் வைத்து குறித்த நபரை தீடிரென பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது கஞ்சா தொகை இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இவரிடமிருந்து 11 கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து கைது செய்த சந்தேக நபரை 07.05.2016 அன்று அட்டன் நீதவான் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)