கஞ்சா பொதிகள் வைத்திருந்த நபர்களுக்கு இரண்டாயிரம் ரூபா அபராதம்

150

சட்டவிரோதமாக தன் உடமையில் கஞ்சா பொதிகள் வைத்திருந்த இரு நபர்களுக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அடம்பன் பொலிஸ் பிரிவில் நபர் ஒருவர் சட்டவிரோதமாக தன்வசம் ஐந்து மில்லி கிராம் கஞ்சா கட்டு ஒன்று வைத்திருந்திருந்தபொழுது அடம்பன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டனர்.

நேற்று மன்னார் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டபோது இவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டமையால் இரண்டாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

SHARE