நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஒக்கம்பிடிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் மூன்று கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடத்திச்சென்ற குற்றத்திலேயே 3 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.
மொனராகலை பிரதேச புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.