கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் கைது

127

அனுராதபுரத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து கஞ்சா பெற்றுக்கொண்ட நான்கு இளைஞர்கள் தஹிய்யாகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை விசாரணைக்கு உட்படுத்திய போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த நபரை 50 கஞ்சா பக்கட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கஞ்சா பக்கட் ஒன்றை 500 ரூபாவிற்கு விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரையும், அவரிடமிருந்து கஞ்சா பெற்றுக்கொண்ட 22 மற்றும் 25 வயதுடைய நான்கு இளைஞர்களையும் அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

SHARE