வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 2.7 கிலோ கிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
23 மற்றும் 25 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
வவுனியா காவற்துறையினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.