கடத்தல்காரர்களின் தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்படும்!

221

போதைப் பொருள் கடத்தல்காரர்களின் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்கும் விசேட கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாருடன் தொடர்பு கொள்கின்றார்கள் என்பதனை இந்த கருவிகளின் மூலம் சுலபமாக கண்டறியலாம் என தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருள் வர்த்தகர்களின் தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்பாடல் வழிகளின் ஊடாக தகவல் பரிமாற்றத்தை குறித்த கருவிகளின் ஊடாக வழிமறிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இந்த கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகை கருவிகள் இன்மையினால் நீண்ட காலமாக இலங்கை பொலிஸார் குற்றச் செயல்களை தடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த அதி நவீன தொழில்நுட்ப சாதனத்தை இலங்கைக்கு வழங்கக் கூடாது என அவுஸ்திரேலியாவின் முன்னாள் ராஜதந்திரியொருவர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதனை அந்நாட்டு அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை என கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE