கடத்திசெல்லப்பட்ட பிரபல வர்த்தகர் சடலமாக மீட்பு!

273

625.117.560.350.160.300.053.800.210.160.90

பம்பலபிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் பிரபல வர்த்தகர் மாவநெல்ல பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு, இவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொரிஸார் தெரிவித்துள்ளனர். மாவநெல்ல பகுதியில் அடையாளம் காணமுடியாத இளைஞர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வர்த்தகரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், குற்றப் புலனாய்வு பொலிஸார் குடும்பத்தாருடன் மாவநெல்ல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

பின்னர் இரவு 10 மணியளவில் அங்கு காணப்பட்ட சடலம் கடத்தப்பட்ட வர்த்தகருடையது என அவருடைய குடும்பத்தார் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவநெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும். கடத்தல் தொடர்பில் 7விஷேட பொலிஸ் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வர்த்தக ரீதியான பகை காரணமாக இந்த கொலை இடம் பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் தாம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பம்பலபிட்டி வர்த்தகர் சடலமாக மீட்பு!

பம்பலப்பிட்டிய பகுதியில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட வர்த்தகரின் சடலம் மாவநெல்ல பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் பம்பலப்பிட்டி வர்த்தகரான மொஹமட் சுலைமான் என்பவர் காணாமல் போனதாக முறையிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர் கடத்திச்செல்லப்பட்டதாகவும், அவரை விடுவிப்பதற்காக பெருந்தொகை பணம் கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையிலேயே அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன

SHARE