கடந்த அரசாங்கத்தின் பிழைகள் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதங்களில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை பற்றி பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமையை குறைக்க வேண்டும்.
நாம் வரியை அறவீடு செய்யும் போது வர்த்தக நிறுவனங்கள் மக்கள் மீது பாரியளவில் வரியை அறவீடு செய்ய முயற்சிக்கின்றன. இதனால் மக்களுக்கு பாரியளவில் வரிச்சுமை ஏற்படுகின்றது.
மக்களை வரிச் சுமையிலிருந்து மீட்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.