கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யுமாறு விசாரணை நடத்தி வரும் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட தரப்பினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அரச சொத்துக்களை அபகரித்தமை, நிதி மோசடிகள், நிதிச் சலவை, பொதுச் சொத்து துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநேகமான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகும் நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மோசடிகள் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய தரப்பினர் குறித்து விரிவான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.