கடந்த அரசாங்க முக்கியஸ்தரின் மகனின் டுபாய் கணக்கில் கடாபியின் பணம்

300
கடந்த அரசாங்க முக்கியஸ்தரின் மகனின் டுபாய் கணத்தில் இருந்த 50 மில்லியன் பணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பண தொகையினை லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியினால் பரிசாக, குறித்த முக்கியஸ்தரின் மகனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்டு பணத்தில் 715 கோடிக்கு அதிகமான குறித்த வங்கி கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை முன்னோக்கி நடத்தி செல்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த பணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு டுபாய் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுமதி இதுவரையில் கிடைக்கப்படவில்லை.

எப்படியிருப்பினும் உயிரிழந்த கடாபியினால் இந்த பணம் வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் தகவல்களை உறுதி செய்து கொள்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை குறித்த டுபாய் வங்கி கணக்கு தொடர்பில் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளை மேலும் நிராகரிப்பதற்காக குறித்த முக்கியஸ்தர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE