கடந்த ஆட்சியில் 42,650 கோடி ரூபாவை சுருட்டிய மஹிந்த குடும்பம் –  சதுர சேனாரத்ன

255
மஹிந்த குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை சுருட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதுர சேனாரத்ன, இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் முக்கிய அதிதியாக அழைக்கப்படுவது வாடிக்கையாகி உள்ளது.

அவ்வகையில் இன்று காலி பலப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த ஆட்சியில் முக்கிய பிரமுகர்கள் நான்கு பேர் இணைந்து 42650 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இவர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் காரணமாக மேலதிக விபரங்களை வெளியிட முடியாதுள்ளது.

எனினும் கடந்த ஆட்சியின் குறித்த முக்கிய பிரமுகர்கள் நான்கு பேரும் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

Mahinda-Gotabhaya

mahinda-rajapaksa-basil-rajapaksa-2010-4-4-12-50-29-colombotelegraph

SHARE