கடந்த மாதம் வவுனியாவில் நடைப்பெற்ற  குழந்தை கடத்திய  சம்பவத்துக்கு பிராதான காரணம் கள்ளக் காதலே ஒப்புதல்வாக்கு ழூலத்தில் குழந்தையின் தகப்பன் வசுதரன்

218

தாயுடன் உறங்கிக் கொண்­டி­ருந்த எட்டு மாதக் குழந்தை கடத்தல்: வவு­னி­யாவில் சம்­பவம்; லண்­டனில் இருந்து கணவன் செய்­வித்­த­தாக மனைவி முறைப்­பாடு

வீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்­டிருந்த 8 மாத ஆண் குழந்தை ஒன்­றினை வேன் ஒன்றில் வந்த குழு­வினர் கடத்திச் சென்­றுள்­ளனர். வவு­னியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்­கையில் நேற்று அதி­காலை 2 மணி­ய­ளவில் குறித்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இதே­வேளை லண்­டனில் உள்ள கண­வனே இந்த கடத்­தலை மேற்­கொண்­ட­தாக தாயார் பொலிசில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வவு­னியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்­கையில் வசித்து வரும் 22 வய­து­டைய யுவதி ஒருவர் லண்­டனைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வரை இந்­தியா சென்று திரு­மணம் செய்­துள்ளார்.

கணவன் லண்டன் சென்­றதும் குறித்த யுவதி வவு­னி­யாவில் தனது தாயா­ருடன் வசித்து வந்­துள்ளார். இவர்­க­ளுக்கு ஒரு ஆண் குழந்­தையும் பிறந்துள்ளது.

இந்­நி­லையில் கணவன் ஏற்­க­னவே திரு­மணம் செய்­தவர் என்­பது தெரி­ய­வந்­ததன் கார­ண­மாக இரு­வ­ருக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்டு கடந்த 5 மாதங்­க­ளாக குறித்த யுவதி கண­வ­னு­ட­னான தொடர்பை துண்­டித்­துள்ளார்.

இதன்­போது கணவன் தனது குழந்­தையை தரு­மாறு மிரட்­டி­ய­துடன், குழந்­தையை கடத்­துவேன் எனவும் தொலை­பே­சியில் மிரட்­டி­யுள்­ள­தாக பொலிஸில் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் அதி­கா­லையில் தாயா­ருடன் குழந்தை உறங்கிக் கொண்­டி­ருந்த போது வான் ஒன்றில் வந்த 6 இற்கும் மேற்­பட்டோர் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து உறங்கிக் கொண்­டி­ருந்த குழந்­தையை தூக்கிச் சென்­றுள்­ளனர்.

குழந்தை கடத்­தப்­பட்டு சிறிது நேரத்தில் லண்­டனில் உள்ள கணவன் தொலை­பே­சியில் அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார். இதனால் இந்தக் கடத்தல் தனது கண­வனால் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மனைவி குற்றம் சாட்­டி­யுள்ளார்.

8 மாத ஆண் குழந்­தை­யான வானிஷன் எனும் குழந்­தையே இவ்­வாறு கடத்­தப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் வவு­னியா பொலி­சா­ருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மாதம் வவுனியாவில் நடைப்பெற்ற  கடத்திய குழந்தை சம்பவத்துக்கு பிராதான காரணம் கள்ளக் காதலே ஒப்புதல்வாக்கு ழூலத்தில் குழந்தையின் தகப்பன் வசுதரன்

கடந்த மாதம் வவுனியாவின் தோணிக்கல் பகுதியில் சிறுவன் கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக இலங்கையிலும் , சர்வதேசத்திலும்  ஊடகங்களிலும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. இக் கடத்தல் சம்பவம் ஏன் எதற்காக மேற்க்கொள்ளப்பட்டது என்பதற்கான விசாரனைப்பகுதிகளை எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லை. ஊடகங்கள் நடுநிலையாக செயற்பட வேண்டும் என்ற வகையில் நாம் குறித்த கடத்தல் சம்பவத்தில் ஈடுப்பட்ட சூத்திரகாரியாக கருதப்படும் வசுதரன் அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு கேட்ட போது பல அதிர்ச்சி காரமான சம்பவங்கள் அவருடைய ஒப்புதல் வாக்கு மூலத்தில் சமர்ப்பித்து உள்ளார்.
அதன் அடிப்படையில் நீங்கள் இந்தப் பிள்ளையை கடத்துவதற்கு முகாந்திரம் என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த வசுதரன் அவர்கள்…….

குழந்தை பிறந்து 04மாதத்தில் எனது மனைவி மோனிஸா அவர்கள் குழந்தையை காட்ட முடியாது என கூறி கையடக்க தொலைப்பேசியை நிறுத்தி வைத்திருந்தார். அதற்கு பிறகு தொடர்புகளை மேற்க்கொண்ட போதும் எனது பேச்சுக்கு செவி சாய்ப்பதாக இல்லை.

மோனிஸாவின் தாயாரிடம் தொடர்புக் கொண்ட போது எக் காரணம் கொண்டும் பிள்ளையை காட்ட முடியாது என்று மறுபடியும் கூறியிருந்தனர். திரும்பவும் தொடர்பு கொள்வதற்காக நான் இலங்கையில் இருக்கும் பலரிடம் தொடர்புகளை மேற்க்கொண்டு இருந்தேன். இதுவும் கைக்கூடாமல் போனது. மீண்டும் அவரின் தாயாரிடம் பிள்ளையை கேட்ட போது காட்ட முடியாது. அவ்வாறு காட்டுவதாயின் எனக்கு 5இலட்சம் பணம் அனுப்பி வைக்குமாறு கூறிக்கொண்டதோடு மோனிஸாவுக்கு வேறு திருமணம் பேசிக்கொண்டு இருப்பதாகவும் எனக்கு கூறியிருந்தார். நானும் அதற்கு அமைவாக மோனிஸஸாவின் தாய்க்கு 5இலட்சம் பணம் அனுப்பி வைத்தேன். அதனைப் பெற்றுக் கொண்ட அவர் அவளை விட்டு விடு எனக்கூறினார். ஏன் அப்படி சொல்லுகின்றீர்கள் அவள் யாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாள் என நான் கேட்ட போது. அதற்கு அவள் யாரை திருமணம் செய்துக் கொண்டாள் உனக்கு என்ன? என்று கேட்டார்.

சரி எனக் கூறிவிட்டு எனது பிள்ளையை என்னிடம் பெற்று தருவதாக கூறி அவரே இப்படி ஒரு முறையில் பிள்ளையைக் கொண்டு செல்லுமாறு கூறியிருந்தார். அப்பொழுது நான் கேட்டேன் எவ்வாறு சாத்தியமாகும் என்று மோனிஸா பிள்ளையுடன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து நான் உன்னுடன் தொடர்புகளை மேற்க்கொள்கிறேன். அந்த நேரம் பார்த்து வந்து பிள்ளையை கொண்டு போகும் படி கூறியதற்கு அமைவாகவே நானும் பிள்ளையை கொண்டு சென்றேன். இதன் அடிப்படையில் தான் பிள்ளையை தூக்குவதற்காக ஆட்களுக்கு பணம் கொடுத்து அனுப்பி இருந்தேன். என்பது உண்மை. அதன் பின்னர் பிள்ளையை பாதுகாப்பாக குறித்த இடத்தில் வைத்துக் கொண்டு 03நாட்களுக்கு பின்னர் பிள்ளையை ஒப்படைப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தேன். அதற்கு பிறகு குறித்த கடத்தலை பொலிஸாருக்கு கூறியதும் நான் தான். நான் பிள்ளையைக் கொண்டு சென்றதற்கான முக்கிய நோக்கம் தவறான தாயுடன் எனது பிள்ளை வளரக்கூடாது என்பதற்காக தான். என்னால் என்னுடைய பிள்ளையின் முகத்தை பார்க்காமல் இருக்க முடியாது. தற்போது தாய் கூறும் காரணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கிடையில் ஊடகவியளார் குறுக்கிட்டு கேட்ட போது பால் குடிக்கும் அந்த குழந்தையை இவ்வாறான ஒரு பாணியில் கொண்டு சென்றது தவறு இல்லையா? என்று கேட்ட போது.

நிச்சயமாக தவறு ஆனால் வேறு வழியில்லை தப்பான ஒருவரிடம் எனது பிள்ளை இருக்கும் என்ற விடயத்தை உலகறிய செய்ய வேண்டும்.அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை கூடுதலான நேரம் தாய் பிள்ளையுடன் இருப்பதில்லை என்ற தகவலே எனக்கு அங்கிருந்து கிடைத்திருந்தது.அதைக் கேட்டு மனமுடைந்த நான் பிள்ளையை எப்படியாவது வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முயற்சி செய்தேன். அது எனது பிள்ளை தான் மாற்றுக் கருத்து இல்லை. மோனிஸாவின் பிழையான நடத்தை காரணமாகவே அவளின் தாயாரே எனக்கு தகவலை அறிய தந்தார். அதற்கான ஆதார பூர்வமான ஒலிப்பதிவு என்னிடம் இருக்கின்றது. பிள்ளையை கடத்திய தாய் எவ்வாறு துடிப்பால் என்றும் எனக்கு தெரியும். இது தொடர்பில் என்னுடன் கூட தொலைப்பேசி எடுத்துப் பேசவில்லை. எனது பிள்ளையை என்னிடம் தாங்கள் என்றுக்கூட என்னிடம் கேட்கவில்லை. நான் தான் தொலைப்பேசி அழைப்பை மேற்க்கொண்டு இருந்தேன். எவ்வளவு தூரம் பிள்ளை மீது அக்கறை உடையவள் என்பதை இதில் இருந்து என்னால் புரிந்துக்கொள்ள முடிகியது.

பிள்ளையை கடத்திய விடயம் ஒரு பக்கம் இருக்க நீங்கள் ஏற்கனவே திருமணம் ஆகி 02பிள்ளைகளுக்கு தகப்பனாக இருக்கின்றீர்கள்.அப்படி இருக்க மோனிஸாவை எப்படி திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்து இருச்தீர்கள்.. இது தவறு இல்லையா?
எல்லா விடயங்களும் மோனிஸாவுக்கும் மோனிஸாவின் தாய்க்கும் அவரது அன்ரிக்கும் தெரியும் நான் 2006ஆம் ஆண்டே என் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டேன்.இவ் விவகாரம் இவர்களுக்கு நன்கு தெரியும். எனது மனைவியுடன் பேசுவதில்லை பிள்ளைகளுடன் பேசுகிறேன். அனைத்து பராமரிப்பு செலவுகளையும் நானே கொடுத்து வருகிறேன்.


மோனிஸாவை முதன் முதலாக நீங்கள் எங்கே சந்தித்தீர்கள்?
முதன் முதலாக 2013ஆம் ஆண்டு இந்தியாவில் சந்தித்து இருக்கின்றேன். வெளிநாடு ஒன்று செல்வதற்காக அங்கு வந்து இருந்தார்கள். குறித்த பெண்ணின் தாயார் தனது மகளை திருமணம் செய்யுமாறும். நீங்கள் நல்லவர் என கேள்விப்பட்டோம். உங்களது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் அறிந்திருக்கிறோம். பரவாயில்லை நீங்கள் எனது மகள் மோனிஸாவை திருமணம் செய்துக் கொள்ளுங்கள். என கூறியிருந்தார். இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கு காதல் மலர்ந்தது. வெளிநாட்டில் இருக்க கூடிய இவரது அத்தையே இவருக்கு தொலை தொடர்பு மேற்க்கொண்டு இந்தக் குடும்பத்தில் போய் மாட்டிராதே எனக் கூறியிருந்தார். பின்னர் அவரும் ஏதோ ஒரு வகையில் சம்மதித்தது அடிப்படையில் காதல் விவகாரம் வலுவடைந்து சென்றது. இதன் பிறகு 01மாத கால இடைவெளியில் மோனிஸாவை என்னுடன் இந்தியாவில் விட்டு விட்டு அவருடைய தாயார் இலங்கை வந்து விட்டார்.

மோனிஸா மீண்டும் சிறிது காலம் என்னுடன் தங்கி விட்டு இலங்கை வந்து விட்டார். 2014.07 மாதம் மீண்டும் இந்தியாவிற்கு வந்த மோனிஸா 02கிழமை என்னுடன் தங்கி விட்டு மீண்டும் அவர்கள் இலங்கை திரும்பி விட்டனர். இவளை நான் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொண்டேன். அதுவும் முறைப்படியான பதிவுத் திருமணம் நடைப் பெறவில்லை. முறையாக திருமணம் பதிவு செய்துக் கொள்வதற்கான நடவடிக்கையும் மேற்க்கொண்டு இருந்தேன். காலங்கள் கடந்து சென்ற நிலையில் அதற்கான முன்னெடுப்புகளை மோனிஸா வீட்டாரும் மேற்க்கொண்டு இருக்கவில்லை.விடுமுறையிலயே லண்டனில் இருந்து இந்தியா வருவதன் காரணத்தால் பதிவு செய்வதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையவில்லை.

மோனிசாவால் எழுதப்பட்ட 5 பக்க கடிதம் அதில் தனது வாழ்க்கையில் மண் அள்ளிப்போட்டவர்களும் தனது வாழ்க்கையில் நடந்த அனைத்து விடையங்களும் பெரும் அதிர்வலைகளை மட்டுமல்ல குற்றவாளிகளை இலகுவில் கண்டு பிடிக்ககூடியவகையில் அமைந்திரப்பது ஆச்சரியமே’ ஊடக தர்மம் கருதி அதனை நாம் வெளியிடவில்லை மோனிசா இக்கடிதத்தை ஏன் எழுதினார்?

வாக்குழூலத்தில் வெளியாகும் பல உண்மைகள்

தெடரும்…………

SHARE