கடந்த 24 மணித்தியாலங்களில் 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

452

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்856 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக  அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 184 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இதுவரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 6041 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE