யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கு, அவர்களது தேவை கருதி அலுவலக பாவனைக்காக தளபாடத் தொகுதி ஒன்றினை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அயூப் அஸ்மின் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டிற்க்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சினூடாக கொள்வனவு செய்து அதனை கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் அவர்களும் இணைந்து சமாசாத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் வைபவம் 28-09-2016 செவ்வாய் மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
