கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்

178

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தமது பதிவுகளை கடற்படை முகாமில் மேற்கொள்ள வேண்டும் என கடற்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இப் புதிய நடமுறையானது நேற்று செவ்வாய்கிழமை முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மீனவ சமூகத்தினருக்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தெளிவுபடுத்தியிருந்தனர். மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன்னர் தமது படகுகளின் திணைக்கள பதிவுகள், படகுகளின் காப்புறுதி அத்தாட்சிகள், அவ் படகுகளில் கடற்தொழிலுக்குச் செல்லும் மீனவர்களின் அடையாள அட்டைகளின் பிரதிகள் அடங்கிய சகல ஆவணங்களதும் பிரதிகள் அந்தந்த கடற்படைமுகாமில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன் இவற்றின் ஒரு பிரதிகளானது மீனவர்களும் தமது படகில் வைத்திருக்க வேண்டும் எனவும் கடற்படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE