கடற்றொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்களை பாவிக்கத் தடை

573
மீன்பிடி நடவடிக்கைகளின் போது பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்களை இன்று முதல் பாவிப்பதற்கு தடை விதிப்பதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்றொழிலின் போது பாதிப்பை ஏற்படுத்தும் உபகரணங்கள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை நாரா நிறுவனம் கடற்றொழில் அமைச்சரிடம் இன்று கையளித்துள்ளது.

லைலா வலை மற்றும் சுறுக்கு வலை என்பவற்றைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட தடை விதிப்பதாக அமைச்சர் இதன் போது  அறிவித்துள்ளார்.

இன்று முதல் இது சட்டமாக்கப்படுவதாக இந்த நிகழ்வின் போது அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு எதிராக தற்போது காணப்படுகின்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஈடுபடுகின்றவர்களை வெடிபொருள் சட்டத்தின் கீழ் கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

SHARE