புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டார பகுதியினை சேர்ந்த கடலில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளது.
குறித்த நபர் மாத்தளன் கடலில் நேற்று(28) மாலை குளிக்கச் சென்ற புது கடலில் காணாமல் போய் உள்ளார்.
இந்த நிலையில் இவரது உடல் இன்று (29) பிற்பகல் முல்லைதீவு சாலை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது.
33 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கரை ஒதுங்கிய உடலத்தினை மீட்கும் நடவடிக்கையில் கிராம சேவையாளர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டதுடன் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.