அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸின் மரணத்தை கடவுளே நினைத்திருந்தாலும் காப்பாற்றியிருப்பது கஷ்டம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது அவுஸ்திரேலியா வீரர் பில் ஹியூஸ் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அவுஸ்திரேலியா கிரிக்கெட் விரர்கள் பலர் இச்சம்பவத்தை இன்னும் மறக்கமுடியாமல் உள்ளனர்.
இது போன்ற சம்பவம் மற்ற வீரர்கள் யாருக்கும் நடைபெறக் கூடாது என்பதற்காக அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் பல கட்ட ஆய்வில் இறங்கியுள்ளது.
இந்த ஆய்வு குறித்து மைக்கேல் பார்னஸ் கூறுகையில், பில் ஹியூஸ் தாக்கப்பட்ட நொடியிலே அவரது மரணம் உறுதியாகிவிட்டதாகவும், அதனால் அவரை காப்பாற்றுவது சாத்தியமில்லை என கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் கடவுளே நினைத்திருந்தால் ஹியூஸை காப்பாற்றுவது சற்று கடினம் தான் எனவும் இது கொடூரமான விபத்து என்றும் அதனால் கிரிக்கெட் பாதுகாப்பே இல்லாத விளையாட்டு என சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதனால் இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் நிச்சயமாக பார்த்துக் கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.
பவுன்சர் தாக்கி மரணமடைந்த பில் ஹியூஸ், அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான ஸ்டுவர்ட் கிளார்க்கின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.