கடுமையான வயிற்றுப்போக்கு பிரச்சனையா? இதை உடனடியாக செய்திடுங்கள்

205

நம்முடைய அன்றாட உணவு பழக்க வழக்கம், மாசு கலந்த நீர், குடலில் ஏற்படும் பாக்டீரியா, வைரஸ் தொற்றுக்களின் காரணமாக வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

சிலருக்கு தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் ஏற்படும். இதனை அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

எனவே வயிற்று போக்கு பிரச்சனையை குணப்படுத்த இயற்கையில் உள்ள அற்புத வழிகள் இதோ.

எலுமிச்சைச் சாறு

வயிற்றுப்போக்கு ஏற்படும் போது, எலுமிச்சைச் சாற்றில் தண்ணீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து குடிப்பதால் வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது.

மாதுளை

தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட்டால், 3 கப் மாதுளைப் பழம் ஜூஸ் குடிக்கலாம். அல்லது மாதுளம் பழத்தை பழமாக கூட சாப்பிடலாம்.

தேன்

தேன் ஒரு சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. எனவே தேன் மற்றும் ஏலக்காய் பொடியை வெந்நீரில் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடித்தால், வயிற்றுப்போக்கு சரியாகிவிடும்.

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆன்டிபாக்டீரியல் குணம் வயிற்றுப்போக்கை நிறுத்தும் தன்மைக் கொண்டது. எனவே 1/2 டீஸ்பூன் சுக்குப் பொடியை மோரில் கலந்து நாள் ஒன்றுக்கு 3 முறை குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

பப்பாளி காய்

பப்பாளி காய் வயிற்றுப்போக்கிற்கு நல்ல மருந்தாகும். எனவே பப்பாளி காயைத் துருவி மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி சிறிது நேரம் கழித்து குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மோர்

மோரில் உள்ள அமிலத்தன்மை செரிமான இயக்கத்திற்கு உதவுகிறது. எனவே ஒரு டம்ளர் மோரில் உப்பு, சிறிது ஜீரகப்பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவை சேர்த்து, குடித்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.

சுரைக்காய் ஜூஸ்

சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து நமது உடலை வறட்சி அடையாமல் தடுக்கிறது. எனவே சுரைக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து குடிக்க வேண்டும்.

SHARE