கடும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள்

177

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட கடும் காற்றினால் பல்வேறுபட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் பச்சிலைப்பள்ளியின் இத்தாவில் கிராமத்தில் புதிதாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு உடனடியாக சென்ற தவிசாளரும் குழுவினரும், குறித்த பகுதிக்கு பொருப்பாக உள்ள அமைப்புக்களுடனும் அரச அதிகாரிகளுடனும் தொடர்பினை ஏற்படுத்தி நிலைமையை தெரியப்படுத்தினர்.

உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் அவ்விடத்துக்கு வருகைதந்து மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

இங்கு மக்கள் “தமக்கு உடனடியாக நிரந்தர வீடு வேண்டும் எனவும், அதுவும் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்படும் குறைந்த தொகை வீடு வேண்டாம்” எனவும் கூறியிருந்தனர்.

 

SHARE