கடும் குளிரால் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

220

சிரியாவில் கடும் குளிரால் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல்15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் கடந்த மாதத்திலிருந்து கடும் குளிர் நிலவி வருகின்றது.

இந்நிலையில் இது குறித்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கான யுனிசெப் பிராந்திய இயக்குநர் ஜியெர்ட் கேப்பாலியர் வெளியிட்டுள்ளஅறிவிப்பு படி, தற்போதைய சுழலில் சிரியாவில் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தது 15 குழந்தைகள் இறந்திருக்கும் என்று கூறியுள்ளனர்.

மேலும் ஜோர்தானுக்கும் சிரியாவிற்கும் தென்மேற்கு எல்லை பகுதியில்தொடர்ந்து உறைபனி நிலவி வருகின்றது.

இதனால் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஒரு வயததிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம்பேர் உயிரிழந்துள்ளதாகவும்,கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பல இதில் அவதிபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் உலக நாடுகள் மருத்துவ வசதி வழங்கி உதவிடவும் கோரியுள்ளது.

SHARE