துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக கொழும்பு விளக்கமறியல் சிறையில் இருந்த சமயங் எனப்படும் படேபொல அருண படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட பதட்டத்தைப் பயன்படுத்தி இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சம்பவத்தின் சூத்திரதாரி இன்று காலை தொம்பே பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் சம்பவத்துடன் தொடர்புடைய கைத்துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அறிமுகமற்ற நபர் ஒருவர் ஒரு வாரத்திற்கு முன்னர் அதனை தன்னிடம் கையளித்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சிறைச்சாலை வளாகத்தினுள் அங்கொட லொக்கா மற்றும் சமயங் குழுவினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு காரணமாகவே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கான திட்டமிடல்கள் மற்றும் வழிகாட்டுதல் அனைத்தும் சிறைச்சாலைக்குள்ளிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி:
கடுவல நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது!