நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். ட்விட்டர் மூலம் பல விசயங்களுக்காக குரல் கொடுத்தவர் தற்போது நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டார். அண்மையில் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி நல்ல வரவேற்பை பெற்றார். மக்கள் நீதி மையம் என அவர் கட்சிக்கு பெயர் சூட்டி கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதே வேளையில் அவருக்கு இந்தியன் 2 , சபாஷ் நாயுடு, விஸ்வரூபம் 2 என படங்கள் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இனி அவர் 24-ஆம் தேதி அடுத்த கட்ட அறிவிப்பு வரும் என்று கூறி நிறைவுசெய்தார்.