கட்சித் தலைவர்களுக்கு நாளை அவசர கூட்டம்

329

கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நாளை அவசரமாக நடைபெறவுள்ளது. சபநாயாகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அரசியல் அமைப்பு பேரவை அமைப்பது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றை அரசியல் அமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.

அந்த விவாதங்களுக்கு முன்னதாக, அரசியல் அமைப்புப் பேரவைக் குறித்து கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் அறியப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Karu-Jayasuriya

SHARE