கட்சி ஒழுக்கத்தை மீறியவர்கள் தற்போது மன்னிப்பு கோருகின்றார்கள் – எஸ்.பி. திஸாநாயக்க:

247
கட்சி ஒழுக்கத்தை மீறியவர்கள் தற்போது மன்னிப்பு கோருகின்றார்கள் - எஸ்.பி. திஸாநாயக்க:

 
கட்சி ஒழுக்கத்தை மீறியவர்கள் தற்பொது மன்னிப்பு கோரி வருவதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஒழுக்கத்தை மீறிச் செயற்பட்ட உறுப்பினர்கள் சிலர் தற்போது மன்னிப்பு கோரி கடிதங்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சிலர் நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளனர்.

எனவே, கட்சி தொடர்பிலான தீர்மானங்கள் மிகவும் அவதானத்துடனும் நிதானத்துடனும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த தரப்பின் பலர் தற்போது ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் எதிர்வரும் நாட்களில் கட்சி முழு அளவில் மறுசீரமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE