
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கட்டாரிற்கு பணிபுரிய சென்றவர்களுக்கு கட்டார் அரசாங்கம் 3 மாத பொது மன்னிப்பு காலம் வழங்கியுள்ளது.
சட்டவிரோதமாக தொழில்புரியும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காகவே இந்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி வரையில் இந்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா காலம் நிறைவடைந்தும் கட்டாரில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கும் நாடு திரும்புவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என கட்டார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு எதிராக எந்த தண்டப் பணமும் அறவிடப்படாது என்றும் எந்த சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது என்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
கட்டார் அரசாங்கம் இவ்வாறு பொது மன்னிப்பு காலம் வழங்குவது 3 ஆவது முறையாகும்.
தற்போது ஒரு இலட்சத்து 46 ஆயிரம் இலங்கையர்கள் கட்டாரில் பணிபுரிந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.