கட்டிட நிர்மானம் தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் – அனுர பிரியதர்சன யாபா

288
arura

கட்டிட நிர்மானம் தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
வீடுகள் அல்லது வேறும் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விரைவில் பாராளுமன்றில் சட்ட மூலமொன்று நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அடிக்கடி இயற்கை அழிவுகள் இடம்பெறும் காரணத்தினால் சில சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் கட்டிடம் நிர்மானிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆசிரி கருணாமுனி தெரிவித்துள்ளார்.
மண்சரிவு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படும் இடங்களில் கட்டிடங்களை நிர்மாணிக்க அனுமதி வழங்கியமையே அனர்த்தங்கள் ஏற்படக்காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறு கட்டிடங்கள் நிர்மாணிக்க அனுமதிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார். மண் சரிவு ஏற்படக்கூடிய சாத்தியமுடைய இடங்களில் 40,000 கட்டிடங்கள் நிர்மாணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE