கட்டுநாயக்காவில் மஹிந்த குடித்த கோப்பிக்கு 4500 ரூபாய் பில்

226

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நூதனமான சங்கடத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதியில் கோப்பி கோப்பை ஒன்றிக்காக 4500 ரூபாய் கட்டணம் செலுத்தி, அதனை பெறும் நிலைக்கு மஹிந்த தள்ளப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதிக்கு சென்ற சமயத்தில், தேனீர் பருகும் அவசியம் உண்டா என அதன் ஊழியர் ஒருவர் வினவியுள்ளார். இதன்போது தனக்கு ஒரு கோப்பை தேனீர் வழங்குமாறு கேட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து ஒரு கோப்பை கோப்பியும், அதற்காக 4500 ரூபா கட்டண சீட்டு ஒன்றும் மஹிந்தவிடம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் இவ்வாறான சிக்கல் ஒன்றுக்கு முகம் கொடுக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

எப்படியிருப்பினும் விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதியில் யாருக்கும் தேனீருக்கு கட்டணம் அறவிடப்படாதென விமான நிலையத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் கேட்டரிங் சேவையை பெற்றுக் கொண்டால் மாத்திரமே கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE