கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி

441

ஒரு தொகை போலி அமெரிக்க டொலரை இலங்கைக்கு கடத்தி வந்த மாலைத்தீவு பிரஜை ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். 49 வயதான மாலைத்தீவு பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 8,450 டொலர் பெறுமதியான 169 போலி டொலர் நாணயங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன் இலங்கை ரூபாய் பெறுமதி 13 லட்சத்து 68 ஆயிரத்து 900 ரூபாய் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த போலி நாணயத்தாள்களை இலங்கையில் மாற்றும் நோக்கில் மாலைத்தீவு பிரஜை இலங்கை வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றிய போலி டொலர்களுடன், மாலைத்தீவு பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

SHARE