கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிக்கிய வெளிநாட்டு பெண்! வயிற்றில் இருந்த பெறுமதியான பொருள்

124

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்ணின் வயிற்றிலிருந்து போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் உட்பட இருவர் நேற்று மாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 67 வயதான பெண்ணொருவரும், அவருடன் இருந்த 44 வயதான ஆணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் என தெரியவருகிறது.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்டு அவரின் வயிற்றில் இருந்து 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான 35 போதை மாத்திரைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் சந்தேகநபர்கள் இருவரையும் ஏழு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

SHARE