கட்டு கட்டாக கிடைத்த பணம்

164

பிரித்தானிய நாட்டில் போதை மருந்து சோதனைக்கு சென்ற பொலிசார் கட்டு கட்டாக பணத்தை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Merseyside நகர் பொலிசாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் Thatto Heath மற்றும் St Helens ஆகிய இரண்டு இடங்களில் போதை மருந்து வேட்டைக்கு புறப்பட்டுள்ளனர்.

இரண்டு இடங்களில் சோதனை செய்தபோது சுமார் 12 கிலோ எடையுள்ள ஹெராய்ன் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதுமட்டுமில்லாமல், பெட்டி ஒன்றில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட 5,00,000 பவுண்ட் பணத்தை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் Huyton என்ற பகுதியில் வீட்டுக்கு வெளியே நின்றுருந்த காரை சோதனை செய்தபோது அங்கு 30,000 பவுண்ட் பணத்தை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்தின் மதிப்பு 1.2 மில்லியன் பவுண்ட் எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் 52 மற்றும் 56 வயதுடைய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE