நாசாவின் கியூறியோசிட்டி ரேவரில் ஏற்பட்டுள்ள பிழைகள் காரணமாக அது தரவுகளை புவிக்கு அனுப்புவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவிக்கிறது.
இதனால் செவ்வாய் மீதான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி கடந்த வாரம் சனி இரவன்று மேற்படி கோளாறு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர்.
ரோவரிலிருந்து தரவுகள் நல்லபடியாக வந்துகொண்டிருந்த போதிலும், நாசாவால் அதன் நினைவகத்திலிருந்து சில தகவல்கனைப் பெறமுடியாமல் போயுள்ளது.
சில நாட்கள் முயற்சி செய்தும் கூட நாசாவால் அத் தகவல்களை செவ்வாயிலிருந்து பெறமுடியாமல் போயுள்ளது.
ஏற்பட்டுள்ள கோளாறை சீர்செய்யும் வரை நாசாவால் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது என தெரியவருகிறது.