கணவனை கண்டம் துண்டமாக வெட்டி, தோட்டத்திற்கு உரமாய் பயன்படுத்தியுள்ள மனைவி.

472

ரஷ்யாவில் கணவனை கண்டம் துண்டமாக வெட்டி, தோட்டத்திற்கு உரமாய் பயன்படுத்தியுள்ள மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Tatarstan பகுதியில் உள்ள Staroe Slyakovo கிராமத்தைச் சேர்ந்த தம்பதி Alexander-Olga Sterlyadeva.

இந்நிலையில் அலெக்சாண்டர் மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால், இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.

விவாகரத்து செய்து கொண்ட போதிலும் இருவரும் லிவிங் டூ கேதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கணவன் தனக்கு செய்த கொடுமைகளை எல்லாம் மறக்க முடியாமல் Olga Sterlyadeva அலெக்சாண்டரை  இரண்டு கோடாரியை பயன்படுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.அதன் பின் chainsaw-வை பயன்படுத்தி அவரது உடல்களை துண்டு துண்டாக வெட்டி, வீட்டில் அருகில் இருக்கும் சீமைக்காய் தோட்டத்திற்கு உரமாய் போட்டுள்ளார்.

அதன் பின் இவர் ரகசியமாக Naberezhnye Chelny பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று அங்கு உடல்நிலை சரியில்லாதது போல் தங்கியுள்ளார்.

அப்போது இந்த தம்பதிக்கு இருந்த மூன்று குழந்தைகள் தோட்டத்தில் உடல் பாகங்கள் புதைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் அந்த இடத்தை தோண்டி பார்த்த போது, அது அலெக்ஸ்டாண்டரின் உடல் பாகங்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது Olga Sterlyadeva குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதால் குறைந்தபட்சம் அவருக்கு 15-ஆண்டுகளாவது சிறை தண்டனை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

SHARE