கணவன் தன்னை பிரிந்து சென்ற ஆத்திரத்தில் குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்

183

சீனாவில் கணவன் தன்னை பிரிந்து சென்ற ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wei Juan (22) என்ற பெண்ணுக்கு தனது கணவருடன் சமீபகாலமாக கருத்துவேறுபாடு இருந்து வந்தது.

இதையடுத்து Juan-ஐ அவர் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் கணவர் மீது ஆத்திரம் கொண்டார் Juan. இதையடுத்து தனது குழந்தையை கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்து அனுப்பினால் கணவர் மீண்டும் தன்னிடம் வந்துவிடுவார் என எண்ணினார் Juan.

இதன்பின்னர் பிறந்து இரண்டு மாதங்களே ஆன தனது குழந்தையின் கன்னத்தில் பலமுறை அறைந்தும், முகத்தின் மேல் கை வைத்து மூச்சை திணறடித்தும் துன்புறுத்தியுள்ளார்.

இதையெல்லாம் வீடியோவாக எடுத்து கணவருக்கு அனுப்பியுள்ளார். குறித்த வீடியோ வைரலான நிலையில் பொலிசார் Juan-ஐ தேடி வந்தார்கள்.

ஆனால் Juan தானாக முன்வந்து பொலிசில் சரணடைந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், தாயால் பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது நல்ல நிலையில் உள்ளது.

முதலில் Juan-க்கு ஐந்து நாட்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. Juan-க்கு தீவீரமாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.

SHARE