ரஷ்யாவில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வயது குழந்தையை நான்கு கத்தியால் இளம் தாயார் ஒருவர் 21 முறை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Larino என்ற கிராமத்திலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
21 வயதான Maria Sinitskaya என்பவர் தமது கணவரை பழி வாங்க தங்களது ஒரு வயது மகனை தாக்கியுள்ளார்.
சம்பவத்தை அடுத்து தமது கணவரை தொலைபேசியில் அழைத்த மரியா, தங்களது மகனை கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மரியா, தற்போது உளவியல் சிகிச்சைக்காக காத்திருக்கின்றார்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மரியா தமது பிள்ளையை நான்கு கத்தியால் தாக்கியுள்ளார்.
மொத்தம் 21 முறை கத்தியால் தாக்கியுள்ள அவர் நான்கு முறை கழுத்திலும் 17 முறை குழந்தையின் வயிற்றிலும் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார் அந்த கணவர்.
மரியா மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.