கணவரை பிரிந்த அடுத்த நடிகை?

150

‘பைவ் ஸ்டார்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கனிகா. அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வரலாறு’ படத்திலும் நடித்திருந்தார். இவரது கணவர் ஷியாம். 7 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கனிகா அவரது கணவரை பிரிந்து சென்னை வந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கூறிய கனிகா….

“நான் என் கணவரை பிரிந்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. கணவர் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். பிறரை கஷ்டப்படுத்தி அதில் மகிழ்ச்சி காண்பவர்கள்தான் இந்த வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

எங்கள் மகன் ரிஷிக்கு 5 வயது ஆகிறது. அவனை தமிழ் கலாச்சாரப்படி வளர்க்க விரும்பினோம். எனவே, அமெரிக்காவை விட்டு விட்டு சென்னைக்கு வந்து விட்டோம். அன்பும் நம்பிக்கையும் தான் இல்லற வாழ்க்கைக்கு தேவை. அது எங்களிடம் நிறைவாக இருக்கிறது. எங்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது.

இந்த நிலையில் நான் என் கணவரை பிரிந்து வாழ்வதாக வந்த வதந்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு போன் செய்து கேட்டவர்களிடம் விளக்கம் சொன்னேன். பேஸ்புக்கிலும் விளக்கம் கொடுத்தேன்.

நானும் என் கணவரும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு மகன் ரிஷி தான் உலகம். நான் அன்பான கண்டிப்புள்ள அம்மா. என் மகனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் வாங்கி கொடுப்பேன். நான் சைவம். ஆனால் என் கணவருக்காக அசைவமாக மாறினேன். என் கணவர், குழந்தைக்கு பிடித்ததை சமைத்து கொடுப்பது எனக்கு தனி மகிழ்ச்சி” என்றார்.kanika

SHARE