கணவரை பொலிஸார் மாடியிலிருந்து தள்ளிவிடுவதை பார்த்த – சுமித் முனசிங்க

199

எனது கணவரை பொலிஸார் மேல்மாடியிலிருந்து தள்ளிவிடுவதை நான் பார்த்தேன் என எம்பிலிபிட்டியில் பொலிஸாரினால் தாக்கப்பட்ட வேளை மரணமடைந்த சுமித் முனசிங்கவின் மனைவி சசிகா முனசிங்க தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

நாங்கள் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த விதம் குறித்து திருப்தியடையவேயில்லை, எனது கணவர் ஓரு போதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் இல்லை,ஆனால் அநீதிகளிற்கு எதிராக குரல்கொடுக்கும் பழக்கத்தை யுடையவர், இதன் காரணமாகவே நான் இன்று இவரை இழந்துள்ளேன்.

நாங்கள் அன்றிரவு பார்த்ததை தெரிவிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன, நாங்கள் தெரிவித்ததை பொலிஸார் புறக்கணித்துள்ளனர், சம்பவத்தை நேரில் பார்த்த பலர் பொலிஸாரிற்கு சாட்சியமளிக்க தயாராகயுள்ளனர்.எனினும் இதுவரை பொலிஸார் அவர்களிடமிருந்து எந்த வாக்குமுலங்கைளையும் பெறவில்லை.

அன்றிரவு 11.30 மணியளவில் விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த அந்த வீட்டில் பலத்த சத்தங்கள் கேட்டன, நான் அந்த வீட்டை நோக்கி ஓடினேன், அங்கு பலர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்,பொலிஸ் வாகனமொன்று நிறுத்தப்பட்டிருந்தது, எனது கணவர் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டுக்கொண்டிருப்பதை கண்டேன்.

அவர் அவர்களை சட்டத்தை மீறவேண்டாம் என தெரிவித்துக்ககொண்டிருந்தார், நான் அவரை இழுத்துக்கொண்டு செல்ல முயன்றேன், அவ்வேளை குறிப்பிட்ட வீட்டை சேர்ந்தவர்கள் எங்களை உணவருந்திவிட்டு செல்லுமாறு கேட்டனர், தீடிரென சில பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து எனது கணவரை சீருடையணியாத பொலிஸாரிற்கு அடையாளம் காட்டினர்,

அவர்கள் எனது கணவரை இழுத்துச்சென்றனர், என்னை உதைத்து தள்ளினர், அவர்கள் அவரை மேல்மாடிக்கு அழைத்து சென்றனர்,நான் மேல்மாடிக்கு சென்றவேளை அவர்கள் அவரை அங்கிருந்து தள்ளிவிடுவதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

emb

SHARE